சொத்துக்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை மாற்றி அமைத்து தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டு குழு உள்ளது. இக்குழு சொத்துக்கள் மீதான வழிகாட்டு மதிப்பை நிர்ணயம் செய்கின்றது. அவ்வகையில் 2023- 2024 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் சொத்துகளின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டி மதிப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மதிப்பீட்டுக் குழு மதிப்பீட்டை நிர்ணயம் செய்ய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்பதால் 2017 ஆம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வழிகாட்டு மதிப்பீடு அமலுக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. இதனை எதிர்த்து ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கட்டுமான நிறுவனங்கள் வழக்குகள் தாக்கல் செய்தது. மேலும் இந்த தொடர்பான சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் சொத்துக்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் சட்ட விதிகளின்படி துணைக்குழு அமைத்து, அறிக்கைகள் பெற்று, ஆய்வு செய்து வழிகாட்டி மதிப்பை அதற்கு பின்னரே நிர்ணயிக்க முடியும். தற்போது உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது. மேலும் விதிகளை பின்பற்றி புதிதாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அதுவரை 2017 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.