மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நான்காவது சுற்றுக்கு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆண்ட்ரே ரூப்லேவ், ஜோகோவிச் தேர்வாகியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லேவ் - அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா ஆகியோர் மோதினர். இதில் ஆண்ட்ரே ரூப்லேவ் 6-2, 7-6, (8-6),6-4 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இவரது நான்காவது சுற்று வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொள்ள உள்ளார்.
மற்றொரு சுற்றில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் - அர்ஜென்டினாவின் தாமஸ் மார்டின் எட்சேவரி உடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3,6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சின் நூறாவது போட்டியாக இது அமைந்துள்ளது. 100 போட்டிகளில் 92 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.