மருத்துவ படிப்புக்கான விண்ணப்பிப்பதிவு நிறைவு

October 6, 2022

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்' என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 2022 - 23ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செப்டம்பர் 12ல் துவங்கியது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான விண்ணப்பிப்பதிவு அக்டோபர் 3ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் , […]

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்' என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 2022 - 23ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செப்டம்பர் 12ல் துவங்கியது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்கான விண்ணப்பிப்பதிவு அக்டோபர் 3ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் , மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 35ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இன்று மாலையுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu