புறக்கோள் ஒன்றில் நீராவி உள்ளதை கண்டுபிடித்தது ஹப்பிள் தொலைநோக்கி

January 29, 2024

சூரிய குடும்பத்தை தாண்டி அமைந்துள்ள புறக்கோள் ஒன்றில், நீர், ஆவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி இதனை கண்டுபிடித்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 97 ஒளி ஆண்டுகள் தொலைவில், GJ9827d என்று பெயரிடப்பட்டுள்ள புறக்கோள் உள்ளது. இது பூமியை போன்ற அமைப்பில், இருமடங்கு விட்டத்துடன் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த கோளில் தண்ணீர் இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதல் முறையாக, அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆவி வடிவில் தண்ணீர் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த […]

சூரிய குடும்பத்தை தாண்டி அமைந்துள்ள புறக்கோள் ஒன்றில், நீர், ஆவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி இதனை கண்டுபிடித்துள்ளது.

பூமியிலிருந்து சுமார் 97 ஒளி ஆண்டுகள் தொலைவில், GJ9827d என்று பெயரிடப்பட்டுள்ள புறக்கோள் உள்ளது. இது பூமியை போன்ற அமைப்பில், இருமடங்கு விட்டத்துடன் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த கோளில் தண்ணீர் இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதல் முறையாக, அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆவி வடிவில் தண்ணீர் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, மிக முக்கிய மைல்கல்லாக விஞ்ஞானிகள் மத்தியில் சொல்லப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கூற்றுப்படி, அந்தக் கோளில் அதிக வெப்பநிலை நிலவுவதால், தண்ணீர் ஆவி வடிவில் காணப்படுகிறது. இது தொடர்பான விரிவான தகவல்கள், தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளன. ஹப்பிள் தொலைநோக்கியின் புகைப்படம் கொண்டு விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu