வாட்ஸ் அப் செயலியல் இன்று முதல் சாட் பில்டர் அம்சம் வெளியாகிறது. வரும் வாரங்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இது பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், சாட் பில்டர் அம்சம் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதன் மூலம், முக்கியமான உரையாடல்களை எளிதாக ஃபில்டர் செய்து பார்க்க முடியும். வாட்ஸ் அப் சாட் விண்டோவில், ஆல், அன்ரீட் மற்றும் குரூப்ஸ் ஆகிய 3 புதிய பில்டர்கள் அறிமுகம் ஆகின்றன. இதன் மூலம், வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் செய்திகளை பயனர்களால் ஒழுங்குமுறைப்படுத்த முடியும். அலுவலகப் பணி சார்ந்த, பள்ளி சார்ந்த மற்றும் குடியிருப்பு சார்ந்த உரையாடல்களை பெரும்பான்மையாக வாட்ஸ் அப் மூலம் கையாளும் பயனர்களுக்கு இந்த அம்சம் பெரிதும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.