அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் இருவர் கடந்த ஒரே வாரத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதலாவதாக, விவேக் ஷைனி என்ற இந்திய மாணவர், பகுதி நேரமாக அங்காடி ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். அங்காடிக்குள் அத்துமீறி நுழைந்த போதை பழக்கம் கொண்ட நபர் ஒருவரை ஷைனி தடுத்து நிறுத்திய போது, அவரால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 16 அன்று இந்த நிகழ்வில் இருந்து மீள்வதற்குள்ளாக, இண்டியானாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த நீல் ஆச்சார்யா என்ற இந்திய மாணவர் காணாமல் போனார். தற்போது, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய இரு இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயிரிழந்தது இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.














