அடுத்த 5 வாரங்களுக்கு எச் 1 பி விசா புதுப்பிப்புக்கான சிறப்பு இயக்கம் நடைபெறுகிறது. அமெரிக்கா இதனை தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், இந்தியா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த 20,000 விண்ணப்பதாரர்களுக்கு எச் 1 பி விசாக்கள் புதுப்பிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியேற்ற துறை கடந்த ஆண்டு புதிய நடைமுறையை தொடங்கியுள்ளது. அதன்படி, விசா புதுப்பிப்புக்காக சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டே விசா புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். அதன்படி, விசா புதுப்பிப்புக்கான சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 வாரங்களில், 20000 விண்ணப்பதாரர்களின் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக வலைத்தளம் அறிவிக்கப்பட்டுள்ளது.