தமிழகத்தில் 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பிப்ரவரி 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காகவும், வட்டார வளமைய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதாக வும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது 2022 காலி பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் 41485 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழையின் காரணமாக பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பிப்ரவரி நான்காம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு தமிழகத்தில் 130 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.














