ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் நிறுவனமானது அரசாங்கத்தின் தி௫த்தப்பட்ட அவசரகால கடன் வரி உத்தரவாதத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய் பெறவுள்ளது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட்- ன் பங்குகள் சுமார் 9 சதவீதம் உயர்ந்துள்ளன.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு உதவுவதற்காக இந்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதியை கடனாக தர முடிவு செய்துள்ளது. இந்த நிதியானது அரசாங்கத்தின் தி௫த்தப்பட்ட அவசரகால கடன் வரி உத்தரவாதத்தின் கீழ் தரப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் 9% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும்
இந்த நிதியானது நிறுவனத்திற்கு அதன் நிலுவைத் தொகையை செலுத்தவும், குத்தகைதாரர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்தவும், புதிய போயிங் 737 மேக்ஸ் விமானங்களை அறிமுகப்படுத்தவும் உதவும் என்று ஒ௫ செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.