செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ட்ரோன் மூலமாக 2 கப்பல்களை ஹவுதிகள் சேதப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேதமான கப்பல்களில் ஒன்று இந்தியாவுக்கு வர வேண்டியது என கூறப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த புரட்சிப்படையான ஹவுதி ராணுவ படை, ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை, ஒரு அமெரிக்க கப்பல் மற்றும் ஒரு பிரிட்டன் கப்பல் ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கப்பல்களுக்கு சிறிய அளவில் சேதம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல்களில் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பலாகும். ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக சர்வதேச வர்த்தகம் பாதிப்படைய தொடங்கியுள்ளது.