அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வழங்கப்பட்ட இறுதி நாள் நீட்டிக்கப்படாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி இன்று அளித்துள்ள பேட்டியில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பவானிசாகர் உபரி நீரை கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட உடைந்த பைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது. போதிய அளவு தண்ணீர் வந்தவுடன்
குளத்திற்கு தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 2016 ஆம் ஆண்டிற்கு முன்பு அங்கீகாரம் பெறாமல் இருந்த வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இவை மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். திட்டமிடப்படாமல் அவசரத்தில் கட்டப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யாமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.














