டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஆறாவது முறையாக சம்மன் அனுப்பியது.
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் ஆஜராகும்படி அமலாக்க துறையினர் கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் நிராகரித்த நிலையில் ஆறாவது முறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் ஆஜராகவில்லை. இது குறித்து அவரது கட்சி இந்த வழக்கு சட்ட விரோதமானது என தெரிவித்து வருகிறது.