நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு எதிரான பண மோசடி வழக்கில் அதன் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்திய நிறுவனத்தின் 38 சதவிகித பங்குகளை பெற்றிருந்தனர். மேலும் இக்குழுவின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் ஏ.ஜே.எல் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் பண மோசடி நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அவ்வகையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூபாய் 751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக அமலாக்கத்துறை கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. மேலும் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட ஏழு பேரிடம் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிக்கைக்கு சொந்தமான ரூபாய் 752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த தடை இல்லை என உத்தரவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.














