ஐபிஎல் 2024 தொடரின் 26வது லீக்காட்டத்தில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது.
லக்னோவில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் 26வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணி 167 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து 18.1 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை குவித்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது இரண்டாவது வெற்றியை டெல்லி அணி பதிவு செய்துள்ளது.