ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிசான் கிஷோர் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா உள்ளூர் போட்டிகளில் விளையாட ஏ பிரிவு ஒப்பந்தத்தில் ஒரு ஆண்டுகளாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து தனது உடல் தகுதி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஒத்துழைக்காதது என்று ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டதால் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தியாவிற்கு தொடர்ந்து ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்டாக் அலி கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா உறுதி அளித்த பிறகு அவர் ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.