ஒவ்வொரு நாளும் 80 கிராம் தங்கத்தை உமிழும் அண்டார்டிகா எரிமலை

அண்டார்டிகாவில் துடிப்புடன் இருக்கும் எரிமலை ஒன்று ஒவ்வொரு நாளும் 80 கிராம் தங்கத்தை வளிமண்டலத்திற்குள் உமிழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இன்றைய மதிப்பில் 6000 டாலர்கள் மதிப்புடைய தங்கம் ஒவ்வொரு நாளும் வெளியேறுவதாக சுவாரசிய தகவல் பகிரப்பட்டுள்ளது. நியூயார்க் போஸ்டில் வெளியாகி உள்ள அறிக்கை ஒன்றில், அண்டார்டிகாவில் உள்ள மவுண்ட் எரிபஸ் என்ற எரிமலை குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பூமியின் தெற்கு முனையில் துடிப்புடன் இருக்கும் எரிமலையாக இது அறியப்படுகிறது. இதிலிருந்து தூசி போன்ற வடிவத்தில் தங்கம் […]

அண்டார்டிகாவில் துடிப்புடன் இருக்கும் எரிமலை ஒன்று ஒவ்வொரு நாளும் 80 கிராம் தங்கத்தை வளிமண்டலத்திற்குள் உமிழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இன்றைய மதிப்பில் 6000 டாலர்கள் மதிப்புடைய தங்கம் ஒவ்வொரு நாளும் வெளியேறுவதாக சுவாரசிய தகவல் பகிரப்பட்டுள்ளது.

நியூயார்க் போஸ்டில் வெளியாகி உள்ள அறிக்கை ஒன்றில், அண்டார்டிகாவில் உள்ள மவுண்ட் எரிபஸ் என்ற எரிமலை குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பூமியின் தெற்கு முனையில் துடிப்புடன் இருக்கும் எரிமலையாக இது அறியப்படுகிறது. இதிலிருந்து தூசி போன்ற வடிவத்தில் தங்கம் வெளியேறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 12,448 அடி உயரத்தில் இருக்கும் எரிமலை சிகரத்தில் இருந்து 621 மைல்கள் தொலைவுக்கு தங்க தூசிகள் கிடைத்துள்ளன. மேலும், இந்த எரிமலை கடந்த 1972 முதல் சீற்றத்தில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தொடர்பான விரிவான ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu