துருக்கி நாட்டின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த ஜூலை 8ம் தேதி இந்த செயற்கைக்கோள் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
துருக்கி முதல் முறையாக Turksat 6A என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தும் பணி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 8, மாலை 7:30 மணிக்கு, புளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 35 நிமிடங்களுக்கு பிறகு செயற்கைக்கோள் தனியாக பிரிந்து சென்றது. சரியாக 42° கிழக்கு கோணத்தில் நிலைநிறுத்தப்பட்டது. பால்கன் 9 ராக்கெட்டின் முதல் நிலை பூஸ்டர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இந்த பூஸ்டருக்கு இது 15வது திட்டம் என சொல்லப்பட்டுள்ளது.