பாலஸ்தீனத்திற்கு ஐ.நா உறுப்பினர் அந்தஸ்து - அமெரிக்கா தடை

April 20, 2024

பாலஸ்தீனத்தை ஐநாவின் உறுப்பு நாடாகும் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது. ஐ.நா பொது சபையில் 193 உறுப்பினர்கள் உள்ளன. இதில் பாலஸ்தீனத்தையும் இணைப்பதற்கு வரைவு தீர்மானம் ஒன்று ஐநா பொது கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆதரவாக 12 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இங்கிலாந்தும் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. எனினும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஐநா சபையின் 194 வது […]

பாலஸ்தீனத்தை ஐநாவின் உறுப்பு நாடாகும் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

ஐ.நா பொது சபையில் 193 உறுப்பினர்கள் உள்ளன. இதில் பாலஸ்தீனத்தையும் இணைப்பதற்கு வரைவு தீர்மானம் ஒன்று ஐநா பொது கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் அல்ஜீரியாவால் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆதரவாக 12 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இங்கிலாந்தும் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. எனினும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஐநா சபையின் 194 வது உறுப்பு நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும்.

ஐநா பொது சபையில் பாலஸ்தீனம் தற்போது பார்வையாளராக மட்டுமே இருக்கிறது. பொதுசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். ஆனால் வாக்கெடுப்புகளில் பங்கேற்க முடியாது. இது குறித்து அமெரிக்க துணை தூதர் ராபர்ட் ஊட் கூறியுள்ளதாவது, இந்த தீர்மானத்தை ரத்து செய்ததால் பாலஸ்தீனம் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக நினைக்கக் கூடாது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு ஒப்புதலுடன் தீர்வு எட்டப்பட வேண்டும். எனவே தான் இந்த தீர்மானத்தை நிராகரித்தோம். பாலஸ்தீனத்தை நாடு என்ற வரையறுப்பில் கொண்டு வருவதற்கு அரசு கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற அந்த பகுதி அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu