எச்.டி.எப்.சி வங்கி செப்டம்பர் காலாண்டில் 10,606 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதன் நிகர வட்டி வருமானம் ரூ. 21,021 கோடிகள். அதாவது முந்தைய ஆண்டை விட 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது HDFC வங்கியின் நிகர செயல்திறன் சொத்து விகிதம் சென்ற காலாண்டில் 1.28 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த காலாண்டில் 1.23 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் அதன் மொத்த சொத்துக்களில் நிகர வட்டி வரம்பு 4.1 சதவீதமாக இருந்தது. அதன் செயல்படாத சொத்து விகிதம் (NPA) முந்தைய காலாண்டில் 0.35 சதவீதமாக இருந்த நிலையில் இந்த செப்டம்பரில் 0.33 சதவீதமானது. இந்த புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டு மதிப்பீடுகளை விட குறைவாக இருந்தன . இ௫ப்பினும் வங்கியானது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 20 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக என்று வங்கி ௯றியுள்ளது.














