ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
ஐசிசி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பத்தி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்த்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. அதில் கீப்பராக ரிஷேப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வாகவில்லை.
அதே போல் ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் இடம்பெறவில்லை. இதில் கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார். மேலும் சிவம் துபே வை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.