கேரளா,கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் இரவு 8 மணி நேர நிலவரப்படி 88 தொகுதிகளில் மொத்தம் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.