தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் போர்ன் வீட்டா ஹெல்த் ட்ரிங்க் அல்ல என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்து இகாமர்ஸ் நிறுவனங்களும் ஹெல்த் ட்ரிங்க் பிரிவிலிருந்து போர்ன் வீட்டா உட்பட்ட அனைத்து பானங்களையும் நீக்க வேண்டும் என மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏப்ரல் பத்தாம் தேதி அறிவித்துள்ளது. அதன்படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் போர்ன் வீட்டா போன்ற பானங்கள் ஹெல்த் ட்ரிங்க் அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பில் வெளியிடப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் அனைத்து இகாமர்ஸ் நிறுவனங்களும் பால், தானியம் மற்றும் மால்ட் சார்ந்த பானங்களில் ஹெல்த் ட்ரிங்க் அல்லது எனர்ஜி டிரிங்க் என லேபிள் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் தவறான சொற்களை பயன்படுத்தி நுகர்வோரை தவறான வழிநடத்துதல் கூடாது எனவும் நிறுவனங்களுக்கு FSSAI எச்சரிக்கை விடுத்துள்ளது.