மரபு ரீதியில் நேரும் இளவயது மரணங்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் 62% தவிர்க்கலாம் - ஆய்வு முடிவு

மரபு ரீதியாக, சிலருக்கு குறைந்த வயதிலேயே மரணிக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்படியானவர்களுக்கு கூட, ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதன் மூலம், மரணத்தை தள்ளி போட முடியும். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேரிடம் ஆய்வு செய்யப்பட்டதில், மரபு ரீதியில் நேரும் இளவயது மரணங்களை 62% தவிர்க்க முடியும் என்று தெரியவந்துள்ளது. முறையான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, தேவையான அளவு தூக்கம் ஆகியவற்றை பின்பற்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்பவர்களுக்கு […]

மரபு ரீதியாக, சிலருக்கு குறைந்த வயதிலேயே மரணிக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்படியானவர்களுக்கு கூட, ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதன் மூலம், மரணத்தை தள்ளி போட முடியும். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 3.5 லட்சம் பேரிடம் ஆய்வு செய்யப்பட்டதில், மரபு ரீதியில் நேரும் இளவயது மரணங்களை 62% தவிர்க்க முடியும் என்று தெரியவந்துள்ளது. முறையான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, தேவையான அளவு தூக்கம் ஆகியவற்றை பின்பற்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்பவர்களுக்கு வாழ்நாள் அளவு நீடிப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், மரபு ரீதியில் நீடித்த ஆயுள் கொண்டவர்களுக்கு, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போதிய உடற்பயிற்சி இல்லாமை, சுகாதாரமற்ற உணவு பழக்க வழக்கம் போன்றவற்றால் வாழ்நாள் அளவு குறைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. BMJ Evidence Based Medicine அறிக்கையில் இது பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu