சொந்த நாடு திரும்பும் சூழல் - கனடாவில் இந்திய மாணவர்கள் போராட்டம்

May 21, 2024

கனடாவில் குடியேற்ற விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவு என்றும் மாகாணம் உள்ளது. இந்த மாகாணம் சமீபத்தில் குடியேற்ற விதிகளை மாற்றி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பல மாணவர்கள் கனடாவில் படித்து வருகிறார்கள். ஆண்டு தோறும் அங்கு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குடியேற்ற விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் ஏராளமானவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்திய […]

கனடாவில் குடியேற்ற விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவு என்றும் மாகாணம் உள்ளது. இந்த மாகாணம் சமீபத்தில் குடியேற்ற விதிகளை மாற்றி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பல மாணவர்கள் கனடாவில் படித்து வருகிறார்கள். ஆண்டு தோறும் அங்கு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குடியேற்ற விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் ஏராளமானவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, ஏராளமான இந்திய மாணவர்கள் கனடா சென்று படிக்கிறார்கள். ஆனால் ஏராளமான மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பும் சூழ்நிலை எதிர்கொண்டு வருகின்றனர் என்ற எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒரு சிலர் திரும்பும் சூழல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அங்குள்ள மாணவர்கள் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்வதாக நாங்கள் நினைக்கவில்லை என்று கூறினார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu