கூகுள் இடமிருந்து 350 மில்லியன் டாலர்கள் நிதி பெறும் பிளிப்கார்ட்

May 27, 2024

கூகுள் நிறுவனம் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 350 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்தின் அனைத்து வித ஒப்புதல்களையும் பெற்று, கூகுள் நிறுவனத்தை பிளிப்கார்ட் நிறுவனத்தின் சிறிய முதலீட்டாளராக இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பிளிப்கார்ட் நிறுவனம் 350 மில்லியன் நிதியை கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெறுகிறது. கூகுள் நிறுவனத்துடன் ஏற்பட உள்ள ஒத்துழைப்பு மூலம், […]

கூகுள் நிறுவனம் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 350 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்தின் அனைத்து வித ஒப்புதல்களையும் பெற்று, கூகுள் நிறுவனத்தை பிளிப்கார்ட் நிறுவனத்தின் சிறிய முதலீட்டாளராக இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பிளிப்கார்ட் நிறுவனம் 350 மில்லியன் நிதியை கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெறுகிறது. கூகுள் நிறுவனத்துடன் ஏற்பட உள்ள ஒத்துழைப்பு மூலம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் வணிகம் விரிவாக்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் கிளவுட் தொழில்நுட்பத்தை பிளிப்கார்ட் பயன்படுத்திக் கொள்ளும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu