நேற்று, மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்கள் சில மணி நேரத்திற்கு முடங்கின. உலகளாவிய முறையில் ஏற்பட்ட இந்த முடக்கத்தால், மெட்டா நிறுவனத்திற்கு பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மெட்டா பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 1.5% இழப்பை சந்தித்தது. ஏற்கனவே, 1.6% வீழ்ச்சி அடைந்திருந்த பங்குகள் இன்று மேலும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் இருந்து திடீரென லாக் அவுட் ஆனதாக புகார்கள் குவிந்தன. எக்ஸ் தளத்தில் குவிந்த புகார்களுக்கு மெட்டா தரப்பில் ஆண்டி ஸ்டோன் பதிலளித்தார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்கள் அளவில் நேற்று ஒரே நாளில் இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.