சென்னையில் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் 4 சக்கர வாகனங்களுக்கான அதிவேக சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹூண்டாய் சார்ஜிங் நிலையம், சென்னையில் நிறுவப்பட்டுள்ள முதல் மற்றும் ஒரே அதிவேக பொது சார்ஜிங் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் 28-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, 180 கிலோ வாட் திறன் கொண்ட அதிவேக சாற்றின் மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. 150 வாட் மற்றும் 30 வாட் என 2 முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அனைத்து நிறுவனங்களின் மின்சார வாகனங்களையும் சார்ஜ் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு ‘மை ஹூண்டாய்’ செயலியில் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த சார்ஜிங் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 100 அதிவேக சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஹூண்டாய் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.