ஈரானில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்று தொடங்கியது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 19ஆம் தேதி பலியானார். அதையடுத்து துணை அதிபர் முகமது முக்பர் இடைக்கால அதிபராக பதவி ஏற்றார். இந்நிலையில் ரைசிக்கு பதிலாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட விரும்புபவர்களின் வேட்பு மனுக்கள் நேற்று முதல் பெறப்படுகிறது.
முதல் வேட்பு மனுவை உள்துறை அமைச்சர் அகமது வஹிதி தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்னும் ஐந்து நாட்களுக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியாக முதுநிலை பட்டம் பெற்ற 40 முதல் 75 வயது வரை கொண்ட யாரும் மனு தாக்கல் செய்யலாம். எனினும், அவர்களை வேட்பாளர்களாக அறிவிப்பதற்கு தலைமை மதகுரு தலைமையில் 12 உறுப்பினர்களுடன் செயல்படும் குழு தான் முடிவு செய்யும்.














