டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதியது.
வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. அதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. அதில் நியூசிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே சொற்பரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து 15.2 ஓவரில் 75 ரன்களில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது