குவைத் தீ விபத்து தொடர்பாக 3 இந்தியர்கள் கைது

June 21, 2024

கடந்த ஜூன் 12-ம் தேதி குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 எகிப்தியர்கள் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த […]

கடந்த ஜூன் 12-ம் தேதி குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட மொத்தம் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இது பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 எகிப்தியர்கள் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். மொத்தம் 23 கேரள மாநிலத்தவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் அமைந்துள்ள காவலர் அறையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 3 இந்தியர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu