கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, சீன ராணுவத்தில் புதிய பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்ஃபர்மேஷன் சப்போர்ட் ஃபோர்ஸ் அதாவது தகவல் ஆதரவு படை என இந்த பிரிவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. நவீன கால யுத்த சவால்களை கருத்தில் கொண்டு இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
சீன ராணுவ ஆணையத்தின் தலைவராக சீன அதிபர் ஜி ஜிங்பிங் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணுவ பிரிவு மூல உபாய பிரிவாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. வலுவான தகவல் அமைப்பு சங்கிலியை ஏற்படுத்துவதே இந்த பிரிவின் முக்கிய பணியாக இருக்கும் என கூறப்படுகிறது, நவீன கால போர்களில் தகவல்களை பொறுத்து தான் வெற்றி அமைகிறது, அந்த வகையில், சீன ராணுவத்தின் புதிய பிரிவு கவனம் பெற்றுள்ளது. இந்த பிரிவின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி யி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.














