ஈரானில் இதுவரை கனமழைக்கு 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.
ஈரானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரசன் ரசவி மாகாணத்தில் உள்ள மசாத் நகரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கின. மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சரிந்தன. இதனால் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் 250க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஈரானில் இதுவரை கனமழைக்கு 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது. அதோடு காணாமல் போன 12 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.