மும்பை மாநகராட்சி பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மும்பை மாநகராட்சி பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுவதாக மும்பை நகரின் துணை முதல்வரும், நிதி மந்திரியுமான அஜித் பவார் தெரிவித்துள்ளார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2.60 ரூபாயும் குறைய உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்ட பின் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.