ப்ளூ ஒரிஜின் விண்வெளி பயணத்தில் இந்தியர்களுக்கு தனி இருக்கை

ப்ளூ ஒரிஜின் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு முறையும் 6 பேர் பயணம் மேற்கொள்கின்றனர். அதில் இந்தியாவுக்கான தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ப்ளூ ஒரிஜின் உடன் இணைந்து செரா என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியர்களை அனுப்புவதில் முக்கிய பங்காற்றுகிறது. பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் கர்மான் லைன் எனப்படும் விண்வெளி எல்லை கோடு பகுதியில் 11 நிமிடங்களுக்கு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் வெறும் 209 ரூபாய் பதிவு கட்டணம் […]

ப்ளூ ஒரிஜின் நிறுவனம் விண்வெளி சுற்றுலாவை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு முறையும் 6 பேர் பயணம் மேற்கொள்கின்றனர். அதில் இந்தியாவுக்கான தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ப்ளூ ஒரிஜின் உடன் இணைந்து செரா என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியர்களை அனுப்புவதில் முக்கிய பங்காற்றுகிறது.

பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் கர்மான் லைன் எனப்படும் விண்வெளி எல்லை கோடு பகுதியில் 11 நிமிடங்களுக்கு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் வெறும் 209 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு, பல்வேறு தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறும் ஒரு நபருக்கு ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்தது குறித்து செரா இணை நிறுவனர் ஜோசுவா ஸ்கர்லா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu