மகாராஷ்டிராவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று மகாராஷ்டிரா முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவின் பிற பகுதிகள் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பேருந்து ரயில் ஆகியவற்றின் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர், குறைந்த நேரத்தில் நிறைய மழை பெய்துள்ளது. இதனால் ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். மேலும் கடலோரப் பகுதிகளில் ராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படையினர் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்














