டி.என்.பி.எல் கிரிக்கெட்: முதல் வெற்றியை பெற்றது சேலம் அணி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேலம் அணி வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் எட்டாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்றில் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் நேற்று இரவு நடந்த ஆறாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் […]

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேலம் அணி வெற்றி பெற்றுள்ளது.

சேலத்தில் எட்டாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்றில் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் நேற்று இரவு நடந்த ஆறாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பர்ட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து சேலம் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் 18.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu