புகை, மது உட்கொண்டு பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை

October 27, 2022

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பணிமனையின் நுழைவு வாயிலில் இருந்து தாங்கள் செல்லும் பிரிவிற்கு ஓரமாகவும், பாதுகாப்பாகவும் சென்றிட வரையறுக்கப்பட்ட பகுதியில் நடந்து செல்ல வேண்டும். பணிமனையின் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவு வாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது, பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக 5 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட […]

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பணிமனையின் நுழைவு வாயிலில் இருந்து தாங்கள் செல்லும் பிரிவிற்கு ஓரமாகவும், பாதுகாப்பாகவும் சென்றிட வரையறுக்கப்பட்ட பகுதியில் நடந்து செல்ல வேண்டும். பணிமனையின் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவு வாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது, பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக 5 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.

தொழில்நுட்ப பணியாளர்கள் வெல்டிங் பணி செய்யும் போது கண்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்திட சாஃப்டி கிளாஸ் அணிந்து பணியாற்றிட வேண்டும். வெல்டிங் பணியின் போது அருகில் பெயிண்ட் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய எவ்வித பொருட்களோ, திரவமோ இல்லாமல் அகற்றிவிட்டு பாதுகாப்புடன் பணி செய்திட வேண்டும். பேருந்திற்குள் வெல்டிங் பணி செய்திடும்போது கண்டிப்பாக பேட்டரி வயர் துண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பகல் பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும் போது ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தினை இயக்கக்கூடாது. பேருந்தினை பின்னோக்கி இயக்க வேண்டிய சூழலில் கண்டிப்பாக மற்றொரு பணியாளர் Signaller ஆக பணிசெய்திட வேண்டும் என்பதனை உறுதிப் படுத்திட வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu