இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் புதிய உச்சம் பதிவாகியுள்ளது.
கடந்த ஜூலை 12ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 66685.4 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை விட 969.9 கோடி டாலர்கள் உயர்வாகும். மேலும், இதுவரை பதிவாகியுள்ள அந்நிய செலாவணி கையிருப்பில் இது உச்சபட்ச மதிப்பாகும். மேலும், அந்நிய நாணய சொத்து மதிப்பு 836.1 கோடி டாலர்கள் உயர்ந்து 58547 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவின் மொத்த தங்கம் கையிருப்பு 123.1 கோடி டாலர்கள் உயர்ந்து 5866.3 கோடி டாலர்கள் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் எஸ்டிஆர் 7.6 கோடி டாலர்கள் உயர்ந்து 1811 கோடி டாலர்களாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள இந்தியாவின் கையிருப்பு மதிப்பு 460.9 கோடி டாலர்களாக உள்ளது.