தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவ்வகையில் இன்று சவரனுக்கு ரூபாய் 480 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 51,440க்கும், கிராமுக்கு ரூபாய் 60 குறைந்து ஒரு கிராம் 6430-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை போன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு மூன்று ரூபாய் குறைந்து ஒரு கிராம் 89 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூபாய் 3000 குறைந்து பார் வெள்ளி ரூபாய் 89 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் தங்கம் விலை ரூபாய் 3160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.