அதானி பவர் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களில் 5% பங்குகளை விற்க அதானி குழுமம் திட்டம்

August 22, 2024

அதானி குழுமம், அதானி பவர் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களின் 5% பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக CNBC ஆவாஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 72.71% அதானி பவர் மற்றும் 70.33% அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் அதானி குழுமத்திடம் உள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பங்கு விற்பனை செய்தியைத் தொடர்ந்து, அதானி பவர் பங்கு 1.2% குறைந்து ரூ. 686.75 ஆகவும், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு 0.5% உயர்ந்து ரூ. 632.5 ஆகவும் உள்ளது. மேலும், […]

அதானி குழுமம், அதானி பவர் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களின் 5% பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக CNBC ஆவாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 72.71% அதானி பவர் மற்றும் 70.33% அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் அதானி குழுமத்திடம் உள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பங்கு விற்பனை செய்தியைத் தொடர்ந்து, அதானி பவர் பங்கு 1.2% குறைந்து ரூ. 686.75 ஆகவும், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு 0.5% உயர்ந்து ரூ. 632.5 ஆகவும் உள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில், அம்புஜா சிமெண்ட்ஸின் பங்கு 18% உயர்ந்தும், அதானி பவர் 30% உயர்ந்தும் உள்ளன. இந்த அறிக்கை குறித்து அதானி குழுமம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu