சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் ரூ.4,500 கோடி வரை விற்பனையானதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது இந்தியா முழுவதிலும் ரூ.4.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையானது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பட்டாசுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தது. இதனால் அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்களை வெளிமாநில வியாபாரிகள் உற்பத்தியாளர்களிடம் முன்னதாகவே கொடுத்துள்ளனர். வழக்கமாக சிவகாசி பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை முடிந்து 15 முதல் 30 நாட்களுக்கு பின்பு தான் உற்பத்தி பணிகள் தொங்கும். ஆனால் இந்த ஆண்டு அனைத்து பட்டாசுகளும் விற்று தீர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் ஆலைகளில் சிறப்பு புஜை நடத்தி முன்னதாகவே உற்பத்தி பணிகளை துவக்கி விட்டனர்.














