ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளை அறிமுகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
சென்னையின் நந்தனத்தில் ஆவின் இல்லத்தில், பால் வளர்ச்சி அமைச்சரான ஆர்.எஸ். ராஜ்கண்ணன் தலைமையில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்களுடன் முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதில், கிராமங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத இடங்களில் புதிய சங்கங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாடுகளை வாங்குவதற்கான கடன்களை வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் புதிய இனிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி மற்றும் முந்திரி அல்வா உள்ளிட்டவை உள்ளன. பொதுமக்கள் தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.














