உலக அளவில் பருவநிலை மாற்றங்கள் காரணமாக 38% மர இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்ற தகவல் ஐ.நா.வின் பல்லுயிர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கொலம்பியா நாட்டின் காலி நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இயற்கை வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைவுகள் பற்றி தீவிரமாக உரையாடுவதற்கான இடமாக அமைந்துள்ளது. சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கை பட்டியலில் 192 நாடுகளில் மரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளன என தெரிவிக்கப்பட்டது. விவசாயம் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்காக காடுகளை அழித்தல், பூச்சிகள், நோய்கள் ஆகியவை மரங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்றன.