ஆந்திராவில் விஜயவாடா-ஸ்ரீசைலம் இடையே கடல் விமான சேவை தொடக்கம்.
ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா-ஸ்ரீசைலம் இடையே கடல் விமான சேவை அறிமுகப்படுத்த உள்ளது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதனை வரும் 9-ந்தேதி தொடங்கவுள்ளார். இந்த சேவையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், மாநில விமான நிலைய மேம்பாட்டு கழகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. கிருஷ்ணா நதியில் பாதாள கங்கா படகு முனையத்திலிருந்து கடல் விமான போக்குவரத்து தற்காலிகமாக வழங்கப்படுகிறது. இந்த கடல் விமானத்தில் 14 பேர் பயணம் செய்யலாம். பக்தர்கள் ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரர் கோவிலிலிருந்து ஸ்ரீசைலம் மல்லன்னா கோவிலுக்கு செல்ல வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றியுடன் முடிந்தால், சேவையை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், விசாகப்பட்டினம், நாகார்ஜுன சாகர் மற்றும் கோதாவரி போன்ற இடங்களிலும் கடல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.














