சீனா தென் சீனக் கடலில் தமது எல்லையை வரையறுத்து படம் வெளியிட்டுள்ளது.
2012-ல் சீனா தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தாமஸ் ஷோல் பகுதியை கைப்பற்றியது. இதை எதிர்த்து பிலிப்பைன்ஸ் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. "சீன ஆக்கிரமிப்பு செல்லாது" என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், சீனா அந்த தீர்ப்பை மறுத்து வருகிறது. மேலும், பிலிப்பைன்ஸ் மீனவர்கள் அங்கு செல்லும் போது, சீன கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் இரு நாடுகளுக்குள் இடையூறு மற்றும் மோதல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. சமீபத்தில், சீனா தென் சீனக் கடலில் தமது எல்லையை வரையறுத்து படம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டு வருகிறது.