இந்தியாவில் தரம் குறைந்த உணவுகள் விற்பனை; சர்வதேச ஆய்வு அதிர்ச்சி

November 12, 2024

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுகளை விற்பனை செய்வதாக சர்வதேச ஆய்வு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவில் பல பன்னாட்டு உணவு நிறுவனங்கள், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றன என்று சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. Access to Nutrition Initiative (ATNI) எனும் அமைப்பு நடத்திய ஆய்வின் படி, நெஸ்ட்லே,பெப்சிகோ மற்றும் யுனிலிவர் போன்ற உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட நிறுவனங்கள், இந்தியா போன்ற நாடுகளில் தரம் குறைந்த […]

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுகளை விற்பனை செய்வதாக சர்வதேச ஆய்வு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தியாவில் பல பன்னாட்டு உணவு நிறுவனங்கள், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றன என்று சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. Access to Nutrition Initiative (ATNI) எனும் அமைப்பு நடத்திய ஆய்வின் படி, நெஸ்ட்லே,பெப்சிகோ மற்றும் யுனிலிவர் போன்ற உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட நிறுவனங்கள், இந்தியா போன்ற நாடுகளில் தரம் குறைந்த உணவுகளை விற்பனை செய்கின்றன என தெரியவந்துள்ளது. ஆய்வில், 30 நாடுகளில் சோதனை செய்யப்பட்டது. இதில், குறைந்த வருமான நாடுகளில் 5 மதிப்பெண்களில் 3.5க்கும் கீழே மதிப்பெண்களை பெற்ற உணவுகள் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டது. ATNI ஆய்வுக்குழு தலைவர் மார்க் விஜ்னே கூறுகையில், இந்த நிறுவனங்கள், ஏழை நாடுகளில் விற்பனை செய்வதை அதிகரிக்க, அங்கு விற்பனை செய்யும் உணவுகளின் தரம் மேலும் மோசமாகிறது என்று கூறியுள்ளார். மேலும்உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின் படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் 70% மக்கள் உடல் பருமனினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சர்க்கரை நோய்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu