ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய குஜராத் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் சாய் சுதர்சன் 103 ரன்னிலும், சுப்மன்கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 10 ரன்னில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது