தமிழ்நாட்டில் உள்ள பெகாட்ரான் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி ஆலையின் 60% பங்குகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 150 முதல் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 40% பங்குகளை பெகாட்ரான் நிறுவனமே தக்க வைத்துக்கொள்ளும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் டாடா நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும். ஏற்கனவே விஸ்ட்ரானின் ஐபோன் ஆலையை வாங்கியுள்ள டாடா நிறுவனம், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சப்ளையராக திகழும் நிலையை அடைந்துள்ளது.
கடந்த 2022 முதல் இந்தியாவில் இயங்கி வரும் பெகாட்ரான் நிறுவனம், 9,500 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 4.5 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பெகாட்ரான் நிறுவனம் 2023-25 காலகட்டத்தில் 1,132 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், டாடா எலெக்ட்ரானிக்ஸ் முதலீடு முக்கியமானதாக அமைந்துள்ளது.














