ஏவுதலுக்கு தயார் நிலையில் ஸ்டார்ஷிப்

November 18, 2024

நவம்பர் 19-ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ஆறாவது சோதனை பயணத்தை மேற்கொள்ள உள்ளது. டெக்சாஸின் போகா சிகா என்ற இடத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலத்தின் மிகப்பெரிய அளவை விளக்கி, அதன் முதல் நிலை பூஸ்டரான சூப்பர் ஹெவியில் ஒரு வாழைப்பழத்தின் படம் ஒட்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ஆறாவது சோதனை பயணத்தின் […]

நவம்பர் 19-ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ஆறாவது சோதனை பயணத்தை மேற்கொள்ள உள்ளது. டெக்சாஸின் போகா சிகா என்ற இடத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலத்தின் மிகப்பெரிய அளவை விளக்கி, அதன் முதல் நிலை பூஸ்டரான சூப்பர் ஹெவியில் ஒரு வாழைப்பழத்தின் படம் ஒட்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ஆறாவது சோதனை பயணத்தின் போது விண்வெளி பயணத்துக்கான பல புதிய தொழில்நுட்பங்கள் சோதிக்கப்பட உள்ளது. முக்கியமாக, சூப்பர் ஹெவி பூஸ்டரை கோபுரத்தின் உதவியுடன் பிடித்து நிறுத்துவது, வளிமண்டல நுழைவு திறன் ஆகியவை சோதிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸின் திட்டத்திற்கு இந்த சோதனை முக்கிய அடித்தளத்தை அமைக்கும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu