அயர்லாந்தில் நடந்த சாலை விபத்தில் 2 இந்திய மாணவர்கள் பலியாகினர். அயர்லாந்தின் கவுண்டி கார்லோ நகரில் வசித்த இந்திய மாணவர்கள் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி, அங்குள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்தனர். நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று, நான்கு நண்பர்களும் ஆடி காரில் மவுன்ட் லெய்ன்ஸ்டர் பகுதியில் இருந்து கார்லோ நகருக்கு பயணித்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

அயர்லாந்தில் நடந்த சாலை விபத்தில் 2 இந்திய மாணவர்கள் பலியாகினர்.

அயர்லாந்தின் கவுண்டி கார்லோ நகரில் வசித்த இந்திய மாணவர்கள் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி, அங்குள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்தனர். நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று, நான்கு நண்பர்களும் ஆடி காரில் மவுன்ட் லெய்ன்ஸ்டர் பகுதியில் இருந்து கார்லோ நகருக்கு பயணித்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu